ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் சுவாமிக்கு திருக்கல்யாணம்.
விருதுநகர் மாவட்டத்தில் முருகன் கோயில் களில் கந்த சஷ்டி சூரசம் ஹாரத்தை அடுத்துநேற்று திருக்கல்யாணம் நடந்தது. ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயி லில் நேற்று மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகன் சுவா மிக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது. திரளானோர்கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
0
Leave a Reply